Sunday, January 9, 2011

9 ஆம் வகுப்பு வரலாறு - கேள்விகளும், பதில்களும்

1. சிந்து சமவெளி மக்கள் வணிகத்தொடர்பு கொண்டிருந்த நாடு
அ) ரஷ்யா ஆ) சீனா இ)ஸ்பெயின் ஈ) எகிப்து

2. மொகஞ்சதாரோ உள்ள இடம்
அ) சிந்து ஆ) பஞ்சாப் இ) குஜராத் ஈ) ராஜஸ்தான்

3. கீழ்க்கண்டவற்றிற்கு சரியான விடைகள் எந்த தொகுதியில் உள்ளன?
1. செம்பு கற்காலம்  - 1. கோட்டை
2. காலிபங்கன்  - 2. குஜராத்
3. லோத்தல்   - 3. ஹரப்பா பண்பாடு
4. சிட்பாடல் 4. ராஜஸ்தான்

அ) 2,4,1,3 ஆ) 4,3,2,1 இ) 4,3,1,2 ஈ) 4,2,3,1

4. பின் வேதகாலம் என பொதுவாகக் கருதப்படும் காலம்
அ) கி.மு. 2000 முதல் கி.மு. 1000 வரை
ஆ) கி.மு. 3000 முதல் கி.மு. 2000 வரை
இ) கி.மு.1000 முதல் கி.மு. 600 வரை
ஈ) கி.மு.500 முதல் கி.மு. 200 வரை

5. ருவி என்னும் ஆடையானது
அ) இடுப்பில் அணிவது ஆ) கழுத்தைச் சுற்றி அணிவது இ) உடல் முழுவதும் மறைக்க அணிவது ஈ) மேற்கண்ட எதுவுமில்லை.

6. முன்வேதகாலத்தைப் பற்றி அறிய உதவுவது
அ) இதிகாசங்கள் ஆ) உபநிடதங்கள் இ) ரிக்வேதம் ஈ) ஆரண்யகங்கள்

7. அஸ்தேயம் என்பது
அ) உண்மை பேசுதல் ஆ) திருடாமை இ) கொல்லாமை ஈ) நல்லொழுக்க வாழ்க்கை வாழ்தல்

8. மகாவீரர் தன் கொள்கைகளைப் போதித்த மொழி
அ) பாலி ஆ) பிராக்கிருதம் இ) சமஸ்கிருதம் ஈ) பாரசீகம்

9. புத்தர் தன் சமயக்கொள்கைகளை முதன்முதலாக பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்த இடம்
அ) காஞ்சி ஆ) சாரநாத் இ) கயா ஈ) வைசாலி

10. முதல் புத்தசமய மாநாட்டினைக் கூட்டியவர்
அ) அஜாதசத்ரு ஆ) பிம்பிசாரர் இ) அசோகர் ஈ) தனநந்தர்

11. அலெக்சாண்டரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர்
அ) போரசு ஆ) அம்பி இ) சந்திரகுப்தர் ஈ) சங்கள மன்னர்

12. செலகஸ் நிகேடரைத் தோற்கடித்தவர்
அ) அலெக்சாண்டர் ஆ) போரசு இ) சந்திரகுப்தர் ஈ)அம்பி

13. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்
அ)மெகஸ்தனிஸ் ஆ) சாணக்கியர் இ) விசாகதத்தர் ஈ) அசோகர்.

14. தன் போதனைகளைப் பரப்ப அசோகர் பயன்படுத்திய மொழி
அ) சமஸ்கிருதம் ஆ) பாலி இ) இந்தி ஈ) பிராக்கிருதம்

15. மௌரியர்களின் கடைசி அரசர்
அ) சந்திரகுப்தர் ஆ) அசோகர் இ) பிரகத்ரதர் ஈ) மகேந்திரன்

16. அக்னிமித்திரனைத் தலைவனாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய நூல்
அ) சாகுந்தலம் ஆ) மாளவிகாக்னிமித்திரம் இ) மேகதூதம் ஈ) இரகு வம்சம்

17. குஷான மரபினைத் தோற்றுவித்தவர்
அ) வீமாகாட்பீசசு ஆ) குஜலாகாட்பீசசு இ) கனிஷ்கர் ஈ) அசுவகோசர்

18. அசுவகோசர் எழுதிய நூல்
அ) புத்தசரிதம் ஆ)மகாவிபாஷம் இ) மத்தியமிகச் சூத்திரம் ஈ) அசுவகோசம்

19. இரண்டாம் சந்திரகுப்தருக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்
அ)குமார குப்தர் ஆ) ஸ்கந்தகுப்தர் இ) முதலாம் சமுத்திரகுப்தர் ஈ)யூணர்கள்

20. குப்தர்களின் அரசவை மொழி
அ) சமஸ்கிருதம் ஆ) பாலி இ) பிராக்கிருதம் ஈ) தமிழ்

21. உலகம் உருண்டை வடிவமானது என்று நிரூபித்தவர்
அ) வராகமிகிரர் ஆ) ஆரியபட்டர் இ) பிரம்மகுப்தர் ஈ) வராகபட்டர்

22. ஹர்சரின் தலைநகர்
அ) கன்னோசி ஆ) பாடலிபுத்திரம் இ) காஞ்சி ஈ) மாளவம்

23. முதலாம் மகேந்திரவர்மனைத் தோற்கடித்தவர்
அ) முதலாம் புலிகேசி ஆ) இரண்டாம் புலிகேசி இ) ஹர்சர் ஈ)குமாரகுப்தர்

24. சரியான விடைகளைத் தெரிவு செய்க.
1. நாலந்தா -1. புனிதப்பயணிகளின் இளவரசர்
2. சியூக்கி   -2. கல்வி மையம்
3. மத்தவிலாசப்பிரகாசனம் -3. மேற்கு நாடுகளின் குறிப்பு
4. யுவான்சுவாங் -4.முதலாம் மகேந்திரவர்மன்
அ) 4,1,2,3 ஆ) 4,1,3,2 இ) 2,4,3,1 ஈ) 2,1,4,3

25. முதல் தரெயின் போர் நடந்த ஆண்டு
அ)கி.பி.1194 ஆ) கி.பி.1191 இ) கி.பி.1193 ஈ) கி.பி.1195

26. சந்தேல மரபின் கடைசி அரசனைத் தோற்கடித்தவர்
அ)கஜினி மாமூத் ஆ) கோரி முகமது இ) குத்புதீன் ஐபக் ஈ) சபக்டிஜின்

27. சமணக்கோவில் தில்வாரா அமைந்துள்ள இடம்
அ) ஆக்ரா ஆ) டெல்லி இ) அபுமலை ஈ) கஜூராஹோ

28. அலாவுதீன் கில்ஜி இரன்தாம்பூரைக் கைப்பற்றிய ஆண்டு
அ) கி.பி. 1351 ஆ) கி.பி.1301 இ) கி.பி.1321 ஈ) கி.பி.1311

29. சித்தூர் ராணி பத்மினியின் கணவர்
அ) பீம்சிங் ஆ) ராணா ராம்தேவ் இ) பல்வீர்சிங் ஈ) ராம்சிங்

30. அடிமைகளின் மேம்பாட்டிற்காகத் தனி அமைப்பைத் தோற்றுவி த்தவர்
அ)பெரோஸ் துக்ளக் ஆ) முகமதுபின் துக்ளக் இ) அலாவுதீன் கில்ஜி ஈ) மாலிக்காபூர்

31, இராமானுஜரின் சீடர்
அ) கபீர் ஆ) மீராபாய் இ) இராமானந்தர் ஈ) துளசிதாஸ்

32. நாமதேவரின் பாடல்கள் எழுதப்பட்ட மொழி
அ) தமிழ் ஆ) வங்காளம் இ) தெலுங்கு ஈ) மராத்தி

33. ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்தவர்
அ) நாதமுனி ஆ) கம்பர் இ) நம்பியாண்டார் ஈ) ஆண்டாள்

34. பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ)கி.பி.1347 ஆ) கி.பி. 1337 இ) கி.பி.1314 ஈ) கி.பி.1342

35. பாமினி சுல்தான்கள் ஆதரித்த மொழி
அ) இந்தி ஆ) உருது இ) தெலுங்கு ஈ) கன்னடம்

36. கிருஷ்ணதேவராயரின் மரபு
அ)சங்கம மரபு ஆ) சாளுவ மரபு இ) துளுவ மரபு ஈ) அரவீடு மரபு

37.  முதலாம் பானிபட் போர் நிகழ்ந்த ஆண்டு
அ) கி.பி.1556 ஆ) கி.பி.1256 இ) கி.பி.1562 ஈ) கி.பி.1526

38. அக்பரின் வருவாய் அமைச்சர்
அ) ராஜா மான்சிங் ஆ) ராஜா தோடர்மால் இ) தான்சென் ஈ) ராஜா பகவன்தாஸ்

39. பத்தாவது சீக்கிய குருவின் பெயர்
அ) குரு கோவிந்தசிங் ஆ) குரு அர்ஜூன்சிங் இ) குருநானக் ஈ) குரு பல்வீர்சிங்.

40. ஜஹாங்கீர் காலத்தில் அறிமுகப்படுத்திய ஒரு பயிர்
அ) கோதுமை ஆ) அரிசி இ) புகையிலை ஈ) தானியம்

41. பாபர் வல்லவராகத் திகழ்ந்த கலை
அ) வரைகலை ஆ) ஓவியம் இ) இசைக்கலை ஈ) நாட்டியம்

42. சரியான விடைகளைத் தெரிவு செய்க
1. சூரத் - 1. மஸ்லீன் துணி
2. திவானி அம் - 2. துறைமுகம்
3, தாரா சுகோ - 3. அக்பரின் அலுவலகம்
4, சோனார்கான் - 4. முகலாய இளவரசர்
அ) 3,4,1,2 ஆ) 3,4,2,1 இ) 4,3,2,1 ஈ) 4,1,2,3

43. வாஸ்கோடகாமா கோழிக்கோடு பகுதியில் இறங்க அனுமதி அளித்த  அரசர்
அ) பீஜப்பூர் சுல்தான் ஆ) விசயநகர அரசர் இ) மன்னர் சாமரின் ஈ) சந்திரநாகூரின் மன்னர்

44. வில்லியம் ஹாக்கின்ஸ் ஒரு
அ) ஆசிரியர் ஆ) வியாபாரி இ) மருத்துவர் ஈ) படைவீரர்

45. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1757 ஆ) 1764 இ) 1765 ஈ) 1771

46. பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கில ஆளுநர்
அ) கர்னல் ஸ்மித் ஆ) மேஜர் மன்றோ இ) கிளைவ் பிரபு ஈ) அட்மிரல் வாட்சன்

47. இந்தியப் பெரும் புரட்சியின்போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர்
அ) வெல்லெஸ்லி ஆ) டல்ஹெளசி இ) கானிங் ஈ) கிளைவ்

48. இராணி லட்சுமிபாய் புரட்சியில் ஈடுபட்ட இடம்
அ) கான்பூர் ஆ) மத்திய இந்தியா இ) லக்னோ ஈ) டெல்லி

49. பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
அ) தயானந்த சரஸ்வதி ஆ) இராம்மோகன்ராய் இ) அன்னிபெசன்ட் ஈ) விவேகானந்தர்

50. பிரம்மஞானசபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
அ) சென்னை ஆ) மும்பை இ) டெல்லி ஈ) கொல்கத்தா

51, இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அறிமுகப்படுத்தியவர்
அ) லிட்டர் பிரபு ஆ) ரிப்பன் பிரபு இ) கர்சன் பிரபு ஈ) கிளைவ் பிரபு

52. வங்காளப் பிரிவினை நடந்த ஆண்டு
அ) 1911 ஆ) 1912 இ) 1910 ஈ) 1905

53. ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1919 ஆ) 1917 இ) 1918 ஈ) 1921

54. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப்பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம்
அ) தலைவர் ஆ) நைட்வுட் இ) பிரபு ஈ) அரசர்

55. பூமிதான இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
அ) 1960 ஆ) 1950 இ) 1952 ஈ) 1951

56. ஐந்தாண்டுத்திட்டத்தினை வகுப்பது
அ) திட்டக்குழு ஆ) தேசிய வளர்ச்சிக்குழு இ) அணுசக்திக்குழு ஈ) பிரதமரின் அலுவலகம்

57. நேரு அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை
அ) தனியார் மயம் ஆ) தாராளமயம் இ) கலப்புப் பொருளாதாரம் ஈ) உலகமயம்

58. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்
அ) பெங்களுர் ஆ) புதுடெல்லி இ) ஐதராபாத் ஈ) சென்னை

59. பொருத்துக
1. எச்.ஜே.பாபா  - 1. உத்தரப்பிரதேசம்
2. எஸ்.எஸ்.பட்நாகர் - 2. டி.எஸ்.ஓ
3. டி.எஸ்.கோத்தாரி - 3. ராஜஸ்தான்
4. கோடா   - 4. சி.எஸ்.ஐ.ஆர்
5. நரோரா   - 5. டி.ஏ.இ
அ) 5,2,1,3,4 ஆ) 5,2,3,1,4 இ) 4,2,5,3,1 ஈ) 5,3,4,2,1

60. முதல் அணிசேரா இயக்க மாநாடு நடைபெற்ற இடம்
அ) கெய்ரோ ஆ) டாக்கா இ) பெல்கிரேடு ஈ) ஜாகர்த்தா

61. சார்க் அமைப்பின் தலைமையிடம்
அ) டாக்கா ஆ) காத்மண்டு இ) மாலே ஈ) புதுடெல்லி

62. முதன்முதலில் இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடித்த ஐரோப்பியர்கள்
அ) டேனியர்கள் ஆ) பிரெஞ்சுக்காரர்கள் இ) போர்ச்சுக்கீசியர்கள் ஈ) ஆங்கிலேயர்கள்

63.  தமிழ்நாட்டில் பாளையக்காரர்முறை தோன்றியது
அ) சோழர் காலத்தில் ஆ) பாண்டியர் காலத்தில் இ) பல்லவர் காலத்தில் ஈ) விசயநகரப் பேரரசர் காலத்தில்

64.  தமிழகத்தில் ஆங்கிலேயரை முதன்முதலில் எதிர்த்தவர்
அ) புலித்தேவர் ஆ) வீரபாண்டிய கட்டபொம்மன் இ) ஊமைத்துரை ஈ) மருது சகோதரர்கள்

65. வேலூர் கலகம் நடைபெற்ற ஆண்டு
அ) 1799 ஆ) 1801 இ) 1806 ஈ) 1857

66. சரஸ்வதி மகால் என்னும் நூலகம் கட்டப்பட்ட ஆண்டு
அ) 1813 ஆ) 1824 இ) 1857 ஈ) 1882

67. சமரச சுத்தசன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர்
அ) பெரியார் ஆ) வள்ளலார் இ) டாக்டர்.முத்துலட்சுமிரெட்டி ஈ) டி.எம்.நாயர்

68. பிராமணரல்லாதவர்க்கு என்று தனி விடுதியை சென்னையில் அமைத்தவர்
அ) தியாகராய செட்டியார் ஆ) சி.நடேசன் இ) சுப்பராயலு ஈ) டி.எம்.நாயர்.

69. தமிழகக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1980 ஆ) 1970 இ) 1991 ஈ) 1978

70. தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1978 ஆ) 1957 இ) 1948 ஈ) 1984

71. முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1979 ஆ) 1989 இ) 1990 ஈ) 2002

72. முதியோர் மாத ஓய்வூதியத்திட்டத்தில் வழங்கப்படும் தொகை
அ) 500 ஆ) 300 இ) 250 ஈ) 400

73. அகரமுதலி என்ற சொற்களஞ்சியத்தை எழுதியவர்
அ) ஒளவை துரைசாமிப்பிள்ளை ஆ) தேவநேயப் பாவாணர் இ) நமச்சிவாய முதலியார் ஈ) டாக்டர். மு.வரதராசனார்

74. சாண்டியல்யன் எழுதிய வரலாற்றுப்புதினம்
அ) கடல்புறா ஆ) வேலைக்காரி இ) சந்திரகாந்தா ஈ) குடும்ப விளக்கு

75. தமிழ்நாடகத்தின் தந்தை என்று போற்றப்பட்டவர்
அ) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ஆ) டி.கே.எஸ்.சகோதரர்கள் இ) சூரியநாராயண சாஸ்திரி ஈ) பம்மல் சம்பந்தம் முதலியார்.


76. புதுடெல்லியின் வரலாற்றுப்பெயர் என்ன?
அ) குருசேத்திரம் ஆ) ஜனக்புரி இ) சாணக்கியபுரி ஈ) இந்திரப்பிரஸ்தம்

77. சீன-இந்தியப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) 1962 ஆ) 1965 இ) 1971 ஈ) 1961

78. பம்பாயைத் திருமணப் பரிசாகப் பெற்ற இரண்டாம் சார்ல° மணந்த இளவரசியின் நாடு
அ) பிரான்சு ஆ) ஸ்பெயின் இ) இங்கிலாந்து ஈ) போர்ச்சுகல்

79. வரதட்சணைத்தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1961 ஆ) 1960 இ) 1962 ஈ) 1963

80. தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டின் அளவு
அ) 30 விழுக்காடு ஆ) 33 விழுக்காடு இ) 50 விழுக்காடு ஈ) 25 விழுக்காடு

81. முதல் கர்நாடகப்போரை முடிவிற்குக் கொண்டு வந்த உடன்படிக்கை
அ) அய்.லா.சாப்பேல் ஆ) பாண்டிச்சேரி இ) பாரிஸ் ஈ) அலகாபாத்

82. ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டவர்
அ) டியூப்ளே ஆ) கவுண்ட்-டி-லாலி இ) புஸ்ஸி ஈ) ராபர்ட் கிளைவ்

83. சிவகங்கைச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர்
அ) பெரிய மருது ஆ) சின்ன மருது இ) பூலித்தேவன் ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்

84. தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் ரயில்வே நிலையம்
அ) திருவல்லிக்கேணி ஆ) பேசின்பிரிட்ஜ் இ) எழும்பூர் ஈ) இராயபுரம்

85. வீரமாமுனிவரின் இயற்பெயர்
அ) ராபர்ட்-டி-நொபிலி ஆ) கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி இ) அருட்தந்தை பெர்னாண்டஸ் ஈ) இக்னேசியஸ் லயோலா.

86. தமிழ்நாட்டில் பொதுக்கல்வி இயக்குநரகம் அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1948 ஆ) 1952 இ) 1823 ஈ) 1822

87. சென்னை சட்டக்கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1950 ஆ) 1952 இ) 1929 ஈ) 1891

88. பொதுக்கல்வி இயக்குநரகத்தின் முதல் இயக்குநர்
அ) சர் தாமஸ் மன்றோ ஆ) சார்லஸ் உட் இ) ஏ.ஜே.அர்புத்நாட் ஈ) கன்னிமாரா பிரபு

89. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
அ) ஆலன் ஆக்டேவியன் ஹியூம் ஆ) மகாத்மா காந்தி இ) டபிள்யூ.சி.பானர்ஜி ஈ) தாதாபாய் நைளரோஜி.

90. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர்
அ) திலகர் ஆ) கோகலே இ) காந்திஜி ஈ) படேல்

91. தீவிரவாதிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக சேரன்மாதேவியில் குருகுலம் நடத்தியவர்
அ) வ.வே.சு.அய்யர் ஆ) வாஞ்சிநாதன் இ) ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஈ கே.காமராஜர்.

92. வேதாரண்யம் உப்புச்சத்தியாக்கிரகத்திற்குத் தலைமை தாங்கியவர்
அ) ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆ) இராஜகோபாலாச்சாரியார் இ) சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஈ) சத்தியமூர்த்தி

93. ஈ.வே.ரா. பெரியார் தமிழில் துவக்கிய இதழ்
அ) புரட்சி ஆ) குடியரசு இ) திராவிடன் ஈ) சுதேசமித்திரன்

94. ஈ.வே.ரா.விற்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது
அ) 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிர° மாநாட்டில்.
ஆ) 1912ல் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பிராமணரல்லாதோர் கூட்டத்தில்.
இ) 1938ல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்.
ஈ) 1924ல் வைக்கம் போராட்டம் நடைபெற்றபோது.

95, தீண்டாமை ஒழிப்புநாள் அனுசரிக்கப்படுவது
அ) சனவரி 26 ஆ) சனவரி 30 இ) ஆகஸ்டு 31 ஈ) செப்டம்பர் 5

96. இந்திய அரசியலமைப்பின் எந்தப்பிரிவு 14 வயதுக்கு உட்பட்ட அனைத்துக்குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி அளிக்க உத்தரவாதம் அளிக்கிறது?
அ) 36வது பிரிவு ஆ) 21வது பிரிவு இ) 45வது பிரிவு ஈ) 10வது பிரிவு

97. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள
இடம்
அ) காவலூர் ஆ) கொடைக்கானல் இ) சென்னை ஈ) மகேந்திரகிரி

98. சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு.
அ) 1881 ஆ) 1885 இ) 1882 ஈ) 1857

99. தமிழகத்தின் டெட்ராய்டு என அழைக்கப்படும் நகரம்
அ) கோவை ஆ) ஓசூர் இ) திருச்சி ஈ) சென்னை

100. ஆசியாவிலேயே மிகப்பெரிய வெளியூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம்
அ) டெல்லி ஆ) கொல்கத்தா இ) மும்பை ஈ) கோயம்பேடு(சென்னை).

No comments:

Post a Comment